பிளவுஸ் டிசைன் கேன்வாஸ் இல்லாமல் தைப்பது எப்படி | How to stitch blouse designs without paper canvas
பேப்பர் கேன்வாஸ் இல்லாமல் பிளவுஸ் டிசைன்
பிளவுஸ் டிசைன் பேப்பர் கேன்வாஸ் இல்லாமல் தைப்பது எப்படின்னு பாக்கலாம். அதுக்காக நான் இப்போ இந்த கிராப் சில்க் புடவை எடுத்திருக்கேன் இந்த கிராப் சில்க் புடவைக்கு பிளவுஸ் டிசைன் தைக்கலாம் இந்த புடவை எப்படி இருக்குனு பாக்கலாம் பிங்க் கலர் சேரி முழுவதும் இருக்கு நேவி ப்ளூ பார்டர் வச்ச அருமையான இந்த புடவைக்கு முந்தானில கோல்டு கலர் அருமையா இருக்கு பார்டர் கலர்லேயே பிளவுஸ் குடுத்திருக்காங்க இந்த பட்டு புடவைக்கு எப்படி பிளவுஸ் டிசைன் தட்ச நல்லாயிருக்கும் பாக்கலாம் வாங்க.
இந்த பிளவுஸ் பின் பக்க கழுத்து டிசைன்க்கு தேவையானவை:
- பிளவுஸ் துணி 1மீட்டர்
- லைனிங் துணி 1மீட்டர்
- லாஸ் 2 மாடல் 2 மீட்டர்
- பீட்ஸ்(மணி) 25
பின் பக்க கழுத்தில் டிசைன் வரைவது
முதலில் பின் பக்க கழுத்துக்கு தேவையான பிளவுஸ் துணி, லைனிங் துணி வெட்டி எடுத்துக்கலாம் அதில் பின் பக்க கழுத்து டிசைன் வரைந்துகொள்ள அளவுகளை மார்க் செய்யவேண்டு கழுத்துக்கு 2.75 இன்ச் (இரண்டே முக்கால் இன்ச்) பின் பக்க கழுத்து நீளம் 9.5 இன்ச் வைத்து வரைந்து கொள்ளவேண்டும் இப்போது இது ஒரு செவ்வக வடிவ பாக்ஸ் போன்று இருக்கும் இதன் மேலே பிளவுஸ் பின் பக்க கழுத்து தேவையான டிசைன்னை வரைந்துகொள்ளவேண்டும் இங்கு படத்தில் கட்டயபடி.
பிறகு அந்த டிசைன் மேலயே கதிரியால் வெட்டி எடுக்கவேண்டும். வெட்டிய பிறகு லைனிங் துணியை பிளவுஸ் துணி மேல்வைத்து முதலில் பிளவுஸ் கீழ் பகுதியில் 1/2 இன்ச் (அரை இன்ச்) அளவுக்கு விட்டுவிட்டு தைக்கலாம் பிறகு அதை திருப்பிக்கொண்டு பார்டர் ஓரத்தில் தையல் போட்டுக்கொள்ளலாம்.
ஓரத்தில் தையல் போட்டபிறகு லைனிங் துணி, பிளவுஸ் துணி இரண்டும் ஒன்றாக வைத்து அணைத்து ஓரங்களிலும் தைத்துகொள்ளளவேண்டும். தைத்த பிறகு ஓரங்களில் தையலுக்கு வெளிப்பகுதியிலுள்ள தேவையில்லாத துணியை வெட்டி எடுத்து விடவேண்டும். இப்பொழுது பின் பக்க கழுத்துக்கு அளவுக்கு லைனிங் துணி எடுத்துக்கொள்ளவேண்டு அதை இரண்டாக மடித்து கழுத்துக்கு டிசைன் பின்பக்கத்தில் வைத்து தைத்துக்கொள்ளவேண்டும். (இங்கு இதை கேன்வாஸ்க்கு பதிலாக நாம் லைனிங் துணி பயன்படுத்துகிறோம்) தைத்த பிறகு கழுத்தின் உள் பகுதில் உள்ள லைனிங் துனியை வெட்டி எடுத்துவிட்டு பின்பக்கமாக திருப்பி கொள்ளவேண்டும். திருப்பியபிறகு கழுத்தின் ஓரத்தில் தையல் போடவேண்டும் இப்போது கழுத்து டிசைன் அழகான வடிவத்தில் இருக்கும். பிறகு இதன் பக்கத்தில் 1 இன்ச் இடைவெளி விட்டு ஒரு தையல் போட்டுக்கொள்ளலாம் பிளவுஸ்ய் பின்பக்கமாக திருப்பி அதிகமாக உள்ள தேவையில்லாத லைனிங் துணியை வெட்டி எடுத்துவிடவேண்டும்.
இப்பழுது கழுத்துக்கு தேவையான டிசைன்னை செய்யலாம்.
பின்னர் அதை ஒரு மூலையில் இருந்து பதிஅளவுக்கு சுருட்டவேண்டும்.சுருடியதை U வடிவில் வளைக்கவேண்டும் அதை பிரியவிடாமல் தைக்கவேண்டும் அதேபோல் அனைத்தையும் தைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை பிளவுஸ் கழுத்தின் ஓரத்தில் 1 இன்ச் தள்ளி சுற்றி வைத்து தைக்கவேண்டும்.
லேஸ் மற்றும் மணிகளை வைத்து தைக்கும் முறை
பிறகு லேஸ்சை எடுத்து கழுத்தின் ஓரத்தில் வைத்து தைக்கவும். இன்னொரு லேஸ்சை எடுத்து டிசைன்னின் ஓரத்தில் தைக்கவும் இதை முடித்த பிறகு பிளவுஸ் கலர்ரில் மணிகளை எடுத்துக்கொண்டு அதை டிசைன்னின் நடுவில் வைத்து அதை ஊசியால் தைக்கவேண்டும்.இதேமாதிரி இந்த பீட்ஸ் வச்சி எல்லா டிசைன்ளையும் தாட்சி எடுத்துக்கலாம். இப்போ பாருங்க பாக்கவே பிளவுஸ் டிசைன் ரொம்ப அழகா இருக்கு. நீங்களும் உங்க பிளவுஸ்க்கு இதுமாதிரி பேப்பர் கேன்வாஸ் இல்லாமல் டிசைன் பண்ணி பாருங்க. உங்க வாடிக்கையாளருக்கு தாட்சி கொடுங்க. இது ரொம்ப புதுசம் அழகாவும் இருக்கும்.