புத்தம் புதிய வித்யாசமான பிளவுஸ் டிசைன்
பேன்சி சேரிக்கு பிளவுஸ் டிசைன் தையல் பயிற்சி மாணவர்களும் தைக்கும் வகையான பிளவுஸ் டிசைன். தினமும் அலுவலகம் செல்லும் பெண்கள் அணிவதற்கு ஏற்ற புத்தம் புதிய வித்யாசமான பிளவுஸ் டிசைன் இது சாதாரண புடவைக்கும் தைத்து போட்டால் அழகாக இருக்கும். இப்போது அதற்கான புடவையை எடுத்து வைத்துள்ளேன் அதற்கு பார்டர் கரும்பச்சை வண்ணத்திலும், புடவை முழுவதும் இளம் பச்சை வண்ணத்திலும் இருக்கிறது. இப்போது இதற்க்கான பிளவுஸ் டிசைன் தைக்கலாம்.
இந்த பிளவுஸ் கழுத்து டிசைன்க்கு தேவையானவை:
- பிளவுஸ் துணி 1 மீட்டர்
- லைனிங் துணி 1 மீட்டர்
- லேஸ் 1 மாடல் 1 மீட்டர்
முதலில் இதற்கான லைனிங் துணியை எடுத்துக்கொள்ளலாம் அதை இரண்டாக மடித்துக்கொள்ளலாம் அதில் டிசைன்னை வரைந்துகொள்ளலாம் பிளவுஸ் பின் பக்க கழுத்தின் அளவு அகலம் (3.25) மூனேகால் இன்ச் அளவும், கழுத்தின் நீளம் 9.5 இன்ச் அளவும் வைத்து ஒரு பாக்ஸ் போல் இரண்டு பக்கமும் வருவது போல் வறையவேண்டும். இப்போது ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு வளைவாக வரைந்துகொள்ளவேண்டும் இங்கு படத்தில் கட்டயபடி.
தனியாக உள்ள பிளவுஸ் துணியின் மீது இந்த வரைந்து வைத்துள்ள லைனிங் துணியை வைத்து அந்த டிசைன் மேல் தைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.தையால் போட்டபிறகு உள்பக்க கழுத்து துணியை வெட்டி எடுத்துவிடவேண்டும். இந்த கழுத்து டிசைன் L போன்று இருக்கும். இப்போது இந்த லைனிங் துணியை உள்பக்கம் திருப்பிக்கொள்ளவேண்டும் திருப்பிய பிறகு கழுத்தின் ஓரத்தில் தையல் போடவேண்டும். கழுத்து பகுதி முடிந்த பிறகு பிளவுஸ்ம் லைனிங்கும் ஒண்ணா வைத்து தைத்துக்கொள்ளலாம். அதிகமாக உள்ள தேவையில்லாத துணியை வெட்டி எடுத்துவிடலாம். பிளவுஸ் கீழ் பகுதியில் மடித்து தைத்துக்கொள்ளலாம்.
பிளவுஸ் பேக் நெக் டிசைன்னை தைத்து கொள்ளலாம்
பிளவுஸ் பேக் நெக் தைத்துவிட்டோம். இனி இதற்கான டிசைன்னை தைத்து எடுத்துக்கொள்ளலாம். புடவை துயில் இருந்து 2 இன்ச் வெட்டி வைத்துள்ளான் அதை கால் 1/4 இன்ச் மடித்து மடித்து பிளிட் தைத்து எடுத்துக்கொள்ளலாம்.
ஒருபக்கம் தைத்த பிறகு அதை கழுத்தின் ஒரு பக்கத்தில் வைத்து தைக்கவேண்டும். தைத்த பிறகு அந்த பிளிட்டை ஒவொன்றாக பதியாக மடிது தைக்கவேண்டும். இந்த துனியில் க்ராஸ் பிஸ் வெட்டி கழுத்தின் L ஷேப் பகுதியில் தைக்க வேண்டும். அதன் பக்கத்தில் இன்னொரு க்ராஸ் பிஸ் வைத்து தைக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு தையல் போட்டுக்கொள்ளலாம்.
பிறகு பிங்க் கலர் கோல்ட் கலருள்ள லேஸ் எடுத்து இரண்டுக்கும் நடுவில் வைத்து தைக்கவேண்டும். கழுத்தின் மற்ற பகுதியிலும் இந்த லேஸ்சை வைத்து தைக்கவேண்டும். பிறகு இதற்கு பேக் டாட் தைத்து இந்த பிளவுஸ் டிசைன் முடித்துவிடலாம்.
பிளவுஸ் டிசைன்
இந்த பிளவுஸ் டிசைன் பார்ப்பதற்கு 4 போற்ற வடிவத்திலும் மற்றும் L வடிவத்திலும் இருக்கும் மற்றவர்கள் கண் கவரும் இது தோன்றும் தினமும் அலுவலகம் செல்லும் பெண்கள் அணிவதற்கு ஏற்ற புத்தம் புதிய வித்யாசமான பிளவுஸ் டிசைன் தைத்துள்ளோம். இது அனைத்து பெண்களும் அணிவதற்கு ஏற்றாற்போலிருக்கும். உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளருக்கு மிகவும் பிடித்தது போல் இருக்கும். நீங்களும் தைத்து பயனடையுங்கள்.