புத்தம் புதிய வித்யாசமான பிளவுஸ் டிசைன் பேன்சி சேரிக்கு பிளவுஸ் டிசைன் தையல் பயிற்சி மாணவர்களும் தைக்கும் வகையான பிளவுஸ் டிசைன். தினமும் அலுவலகம் செல்லும் பெண்கள் அணிவதற்கு ஏற்ற புத்தம் புதிய வித்யாசமான பிளவுஸ் டிசைன் இது சாதாரண புடவைக்கும் தைத்து போட்டால் அழகாக இருக்கும். இப்போது அதற்கான புடவையை எடுத்து வைத்துள்ளேன் அதற்கு பார்டர் கரும்பச்சை வண்ணத்திலும், புடவை முழுவதும் இளம் பச்சை வண்ணத்திலும் இருக்கிறது. இப்போது இதற்க்கான பிளவுஸ் டிசைன் தைக்கலாம். இந்த பிளவுஸ் கழுத்து டிசைன்க்கு தேவையானவை: பிளவுஸ் துணி 1 மீட்டர் லைனிங் துணி 1 மீட்டர் லேஸ் 1 மாடல் 1 மீட்டர் முதலில் இதற்கான லைனிங் துணியை எடுத்துக்கொள்ளலாம் அதை இரண்டாக மடித்துக்கொள்ளலாம் அதில் டிசைன்னை வரைந்துகொள்ளலாம் பிளவுஸ் பின் பக்க கழுத்தின் அளவு அகலம் (3.25) மூனேகால் இன்ச் அளவும், கழுத்தின் நீளம் 9.5 இன்ச் அளவும் வைத்து ஒரு பாக்ஸ் போல் இரண்டு பக்கமும் வருவது போல் வறையவேண்டும். இப்போது ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு வளைவாக வரைந்துகொள்ளவேண்டும் இங்கு படத்தில் கட்டயபடி. தனியாக உள்ள பிளவுஸ் துணியின் மீது இந்த வரைந்து வ